Tuesday, 6 December 2016

ஹைட்ரோ கார்பன் துறையில் முதலீடு:



பன்னாட்டு நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு.
இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக வளர வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். மேலும் இந்திய ஹைட்ரோகார்பன் துறையில் முதலீடுகளை மேற்கொள்ளவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற பெட்ரோடெக் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் இதைக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது;
பெட்ரோலிய பொருள்களின் சீரான மற்றும் சரியான விலை பொருளாதாரத்தை வளர்க்கும் காரணிகளில் ஒன்றாகும். மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் தெற்காசிய பகுதிகளில் பெட்ரோ லிய தொழில்களை தொடங்க வாய்ப்புகள் உள்ளன. இதை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட் களின் உள்நாட்டு நுகர்வில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்கேற்ப உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் இறக்குமதியைக் குறைக்க முடியும்.
பொருளாதார மேம்பாட்டின் அடிப்படை கட்டுமானத்தில் முக்கிய அம்சமாக பெட்ரோலியம் உள்ளது. பெட்ரோலியத்தின் சீரான மற்றும் சரியான விலை பொருளாதாரத்தை வளர்க்கும்.
ஒரு பக்கம் பெட்ரோலியப் பொருள்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது, இதற்கேற்ப எல்லோருக்கும் கிடைக்கச் செய்யும் வகையிலான நம்பகமான பெட்ரோலிய வளம் உள்ளது. இன்னொரு பக்கம் சூழல் சார்ந்த விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியில் ஹைட்ரோ கார்பன் முக்கிய பங்கு கொண்டதாக இருக்கும். பெட்ரோலிய பாதுகாப்பு மற்றும் பெட்ரோலியத்தின் திறமையான பயன்பாடு உள்ளிட்டவையும் நாட்டின் தேவையாக உள்ளன. ஆனால் இந்தியாவில் ஏழை மக்களின் தேவைகளுக்கும் எளிதில் கிடைக்க வேண்டும்.
பெட்ரோலிய உற்பத்தியும், குறிப்பாக ஹைட்ரோ கார்பனும் எதிர்கால இந்தியா குறித்த என்னுடைய லட்சிய இலக்கில் முக்கியமானவை. உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியைக் குறைக்க முடியும். 2022-ம் ஆண்டுக்குள் 10 சதவீதம் இறக்குமதியை குறைக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளதாக மோடி குறிப் பிட்டார்.
உள்நாட்டில் ஹைட்ரோகார்பன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் முதலீட்டுக்குத் உகந்த கொள்கைகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். குறிப்பாக ஷேல் ஆயில் மற்றும் எரிவாயு, நிலக்கரி படுகை மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒரேமாதிரியான அனுமதிகள் குறித்த கொள்கைகள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம் என்றார்.
இந்த வாய்ப்புகளை நமது எண்ணெய் துறை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநாட்டு பங்குதாரர்களோடு கூட்டு சேர்ந்து எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக வளர வேண்டும் என்றும் குறிப்பிட்டவர், இந்தியா-மத்திய கிழக்கு, இந்தியா-மத்திய ஆசியா, இந்தியா-தெற்காசிய எண்ணெய் மண்டலங்கள் என பன்னாட்டு நிறுவனமான வளர வேண்டும் என்றார். மேலும் இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஹைட்ரோகார்பன் துறையின் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மோடி அழைப்பு விடுத்தார்.
Source:THE HINDU

No comments:

Post a Comment